sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீர் ஏற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது!

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீர் ஏற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது!

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீர் ஏற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது!

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திடீர் ஏற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது!


UPDATED : நவ 26, 2025 02:04 PM

ADDED : நவ 26, 2025 01:00 AM

Google News

UPDATED : நவ 26, 2025 02:04 PM ADDED : நவ 26, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி

வர்த்தக நேரத்தில் இரண்டு முறை சிறிய இறக்கத்தை சந்தித்து, பின்னர் ஏற்றம் கண்ட நிப்டி, 2:30 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 74 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 10 ஏற்றத்துடனும்; 6 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி லார்ஜ் மிட்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.03 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி 100 குறியீடு அதிகபட்சமாக 0.20 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது.

19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 11 குறியீடுகள் மட்டும் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.62 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி பைனாசியல் சர்வீசஸ் 25/50' குறியீடு குறைந்தபட்சமாக 0.02 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,213 பங்குகளில் 1,639 ஏற்றத்துடனும்; 1,472 இறக்கத்துடனும்; 102 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்தன. தொடர்ந்து நாளின் இறுதியில் மட்டுமே சிறு சிறு இறக்கம் வருவதால், இறக்கம் தொடரும் என்றோ அல்லது திசைதெரியா நிலை வரும் என்றோ, டெக்னிக்கல்கள் காட்டுவதை முழுமையாக கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

Image 1499853

உடனடியாக ஏற்றம் காண்பதற்கான வேகம் சந்தையில் இல்லாததைப் போன்ற சூழல், நாளின் இறுதியில் இருக்கிற நிலைமையிலும், திடீர் ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு கனன்று கொண்டு தான் இருக்கிறது. 25,925 என்ற லெவலுக்கு மேலே சென்று வால்யூமுடன் நடந்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்

நிப்டியைப் போலவே, சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 15 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. சிறிய இறக்கமோ அல்லது கன்சாலிடேஷனோ நடக்க வாய்ப்பு இருப்பதைப் போன்ற டெக்னிக்கல் நிலைமை தென்படுகிறது. 58,900 என்ற லெவலுக்கு மேல் சென்று வால்யூமுடன் நடந்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us