தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :பக்கவாட்டு நிலையில் வர்த்தகமாகவே அதிக வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் :பக்கவாட்டு நிலையில் வர்த்தகமாகவே அதிக வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் :பக்கவாட்டு நிலையில் வர்த்தகமாகவே அதிக வாய்ப்பு


UPDATED : ஜூலை 17, 2026 02:56 AM

ADDED : ஜூலை 17, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2026 02:56 AM ADDED : ஜூலை 17, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி நேற்று 63 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி 105 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சரிவை சந்தித்து நாளின் இறுதியில் 5 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 2 ஏற்றத்துடனும்; 16 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.10 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 0.47 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்' குறியீடு அதிக பட்சமாக 1.48 சதவீத உயர்ந்தும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிக பட்சமாக 1.53 சதவீதம் சரிந்தும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,431 நிறுவனங்களின் பங்குகளில் 1,542 ஏற்றத்துடனும்; 1,774 இறக்கத்துடனும்; 115 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி சிறிய அளவிலான பியரிஷ் தன்மையுடன் பக்கவாட்டில் வர்த்தகமாகி குறுகிய கால சப்போர்ட்டான 24,000த்திற்கு அருகே நிறைவடைந்துள்ளது.

மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் கலவையான நிலையை காட்டுகின்றன. ஆர்.எஸ்.ஐ., சமநிலையில் இருந்தாலும், எம்.ஏ.சி.டி., மற்றும் ஸ்டோகாஸ்ட்டிக் போன்றவை பலவீனத்தை சுட்டிக்காட்டுகின்றன.

தற்போதைய டெக்னிக்கல் நிலவரப்படி 24,050-24,000 லெவலில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,185-24,250 லெவலில் உடனடி ரெசிஸ்டென்ஸ் உள்ளது. 24,185க்கு மேலே சென்றால் 24,330 வரை செல்ல வாய்ப்புள்ளது.

தற்போதைய டெக்னிக்கல் நிலையில் குறுகிய காலத்தில் பெரிய இறக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், 24,050க்கு கீழே சென்றால் இறக்கத்திற்கான மொமென்டம் அதிகரித்து 23,930 வரை செல்லக்கூடும்.



மொத்தத்தில், இறக்கத்திற்கான வாய்ப்பு தற்போது குறைவாக இருந்தாலும், ஏற்ற வேகம் பலவீனமாக இருப்பதால் நிப்டி பக்கவாட்டு நிலையில் வர்த்தகமாகவே அதிக வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us