டெக்னிக்கல் அனாலிசிஸ்: 'பிராபிட் புக்' செய்ய முயற்சித்தால் இறக்கம் வரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 'பிராபிட் புக்' செய்ய முயற்சித்தால் இறக்கம் வரலாம்
UPDATED : அக் 18, 2025 12:42 AM
ADDED : அக் 18, 2025 12:16 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,546.85 25,781.50 25,508.60 25,709.85
நிப்டி பேங்க் 57,362.90 57,830.20 57,238.65 57,713.35
![]() |
நிப்டி
சிறிய இறக்கத்தில் ஆரம்பித்து, பின்னர் கணிசமான ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 124 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி அதிகபட்சமாக 0.49% ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் செலக்ட்' அதிகபட்சமாக 0.75% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 11 ஏற்றத்துடனும்; 6 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி எப்.எம்.சி.ஜி., அதிகபட்சமாக 1.37% ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.63% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,161 பங்குகளில், 1,200 ஏற்றத்துடனும்; 1,871 இறக்கத்துடனும்; 90 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நேற்று, 52 வார உச்சத்தை தொட்ட நிப்டியில், டெக்னிக்கலாக புல்லிஷ்னெஷ் தொடரவே செய்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம், 'ஓவர்பாட்' நிலைமையும் தொடர்கிறது என்பது தான். எனவே லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை, எந்த நேரத்திலும் வந்துவிடுவதற்கான வாய்ப்புள்ளது. 25,665-க்குக் கீழே சென்றால் இறக்கத்தின் அளவு அதிகரிக்கக்கூடும்.
ஆதரவு 25,545 25,380 25,275
தடுப்பு 25,810 25,930 26,035
நிப்டி பேங்க்
இறக்கத்தில் ஆரம்பித்து, பின் ஏற்ற இறக்கமாக இருந்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 290 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. வால்யூம் அடிப்படையில் பார்த்தால், வெறுமனே விலை ஏற்றத்தினால் மட்டுமே புல்லிஷ் டிரெண்ட் உருவாகவில்லை என்பது தெரிகிறது. உடனடியாக இறக்கம் வர வாய்ப்பு இல்லை என்பது போல் தெரிந்தாலும்; வேறு சில இண்டிகேட்டர்கள் திடீர் இறக்கம் ஒன்று வந்துபோவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளதாக காட்டுகிறது.
ஆதரவு 57,345 56,095 56,760
தடுப்பு 57,930 58,180 58,405
நிப்டி 50 - டாப் -5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எட்டர்னல் 342.75 -5.10 7,79,95,576 49.62
விப்ரோ 240.68 -13.13 4,38,02,251 50.18
எச்.டி.எப்.சி., பேங்க் 1,000.60 6.25 2,52,10,511 55.88
டாடா ஸ்டீல் 171.50 -2.50 2,16,59,007 49.78
ஐ.டி.சி., 411.40 6.25 2,10,71,344 63.30
நிப்டி மிட்கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எஸ் பேங்க் 22.34 -0.78 19,91,36,558 34.44
சுஸ்லான் 53.07 -0.54 17,36,63,310 69.42
என்.எச்.பி.சி., 87.00 0.05 3,03,86,236 69.79
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 71.95 0.16 2,35,91,016 52.16
அசோக் லேலண்ட் 134.52 -2.72 1,51,68,999 39.99
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
ஐநாக்ஸ் விண்ட் 146.40 -0.44 1,44,27,806 57.60
டெல்ஹிவரி 465.60 18.80 92,55,716 63.53
பந்தன் பேங்க் 161.11 -0.45 81,47,603 41.53
என்.பி.சி.சி., 111.49 -0.87 67,75,760 32.48
பி.ஜி., எலக்ட்ரோ ப்ளாஸ்ட் 586.80 17.95 50,38,180 33.60
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
ஹிமாத்சிங்கா செய்டு 118.92 45.93 4,27,779
ஜென்சார் டெக்னாலஜிஸ் 781.00 69.84 6,77,714
எல்.டி., புட்ஸ் 420.00 46.27 8,35,361
டைம் டெக்னோ பிளாஸ்ட் 223.00 19.68 13,47,368
லாரஸ் லேபரட்டரீஸ் 901.00 48.80 25,17,414