தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது


ADDED : செப் 11, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

10-09-2026

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 693.80 6.70

டாடா ஸ்டீல் 186.78 -1.97

ஐ.டி.சி., 259.30 -1.50

எட்டர்னல் 322.10 1.50

ஓ.என்.ஜி.சி., 237.27 3.25

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 22.30 -0.12

சுஸ்லான் எனர்ஜி 44.22 -1.23

அசோக் லேலண்டு 166.12 -0.88

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 86.84 0.84

ஸ்விக்கி 279.00 -3.75

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ரெடிங்டன் 395.00 16.95

பந்தன் பேங்க் 174.00 2.30

ஐநாக்ஸ் விண்டு 76.02 -1.37

ஹிந்துஸ்தான் காப்பர் 528.25 -4.05

மணப்புரம் பைனான்ஸ் 330.80 10.80

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா 365.00 15.60

குஜராத் மினரல் டெவலப்மென்ட் 577.05 2.50

கே.இ.சி., இண்டர்நேஷனல் 412.50 19.30

பராக் மில்க் புட்ஸ் 264.40 10.80

சக்தி பம்ப்ஸ் (இந்தியா) 504.00 36.20

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,446.60 23,494.95 23,380.10 23,477.80

நேற்று 15 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 3 மணி வரை சிறுசிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து பின்னர் நாளின் இறுதியில் 46 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ல் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.08 சதவீத உயர்வுடனும், 'நிப்டிமிட்கேப்150' குறியீடு அதிக பட்சமாக 0.38 சதவிகித சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும் காணப்பட்டன.

இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 0.55 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம்' குறியீடு அதிக பட்சமாக 0.77 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,666 நிறுவனங்களின் பங்குகளில் 1,466 ஏற்றத்துடனும்; 2,077 இறக்கத்துடனும்; 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி மீண்டும் அனைத்து முக்கிய சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு கிளவுடுக்கு கீழே நிறைவடந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் அதிக அளவில் ஓவர்சோல்டு என்ற டெக்னிக்கல் நிலையில் இருப்பதை காட்டுகிறது. 23,380 உடனடி சப்போர்ட்டாக இருக்கிறது.

இதற்கு கீழே சென்றால் இறக்கம் தொடரலாம். உடனடி ரெசிஸ்டென்ஸ் 23,700-23,770ல் இருக்கிறது. இவற்றை தாண்டி ஏற்றம் கண்டாலுமே 23,960-24,030ல் வலுவான ரெசிஸ்டென்ஸை நிப்டி சந்திக்க வேண்டியிருக்கும். டெக்னிக்கலாக ஓவர்சோல்டு நிலமை இருப்பதால் சிறியதொரு ஏற்றம் வர வாய்ப்புள்ளது.

அப்படி ஏற்றம் வந்தாலுமே 23,700ஐ தாண்டாதவரை டெக்னிக்கலாக ஏற்றம் நிலைத்திருக்கும் என்பதற்கான உறுதி ஏதுமில்லை. எனவே, தற்போதைய சூழலில் திசைதெரியா நிலை உருவாக வாய்ப்புள்ளது.

ஆதரவு 23,405 23,335 23,290

தடுப்பு 23,520 25,565 23,615

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us