டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருந்தால் ஏற்றம் வரக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருந்தால் ஏற்றம் வரக்கூடும்
UPDATED : ஜூலை 25, 2026 01:34 AM
ADDED : ஜூலை 25, 2026 01:22 AM

நிப்டி
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று தொடக்கத்தில் இருந்தே இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இடையே 260 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் கணிசமான மீட்சியை சந்தித்த நிலையில், நாளின் இறுதியில் 102 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 2 ஏற்றத்துடனும்; 16 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 0.42 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி100 குறியீடு அதிக பட்சமாக 0.37 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 1.86 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக 1.10 சதவீத சரிவுடனும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,425 நிறுவனங்களின் பங்குகளில் 1,702 ஏற்றத்துடனும்; 1,595 இறக்கத்துடனும்; 128 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி 14, 21, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு கீழே (இ.எம்.ஏ.,) நிறைவடைந்துள்ளது. இது குறுகிய கால டிரெண்ட் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களிலும் பலவீனம் தெரிகிறது.
எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனுக்கு கீழேயும், ஆர்.எஸ்.ஐ., 42.87லிலும் இருக்கின்றன. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஓவர் சோல்ட் என்ற எல்லைக்குள் சென்றுள்ளது. எனவே, திடீர் ஏற்றம் வந்து போக வாய்ப்புள்ளது.
![]() |
இதைத்தாண்டி நிப்டி மேலே சென்றால் மட்டுமே குறுகியகால டிரெண்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இது நடக்க வாய்ப்புள்ளது.

