டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியில் பலவீனம் சற்று தொடரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டியில் பலவீனம் சற்று தொடரலாம்
UPDATED : ஜூலை 10, 2026 02:04 AM
ADDED : ஜூலை 10, 2026 01:34 AM

நேற்று 46 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி நாளின் இடையே 232 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்து நாளின் இறுதியில் 80 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி 100' குறியீடு குறைந்த பட்சமாக 0.43 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 1.92 சதவீதமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 19 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 0.30 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 3.54 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,414 நிறுவனங்களின் பங்குகளில் 2,521 ஏற்றத்துடனும்; 779 இறக்கத்துடனும்; 114 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
![]() |
நிப்டி 14 மற்றும் 24 நாள் சாரசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. எனினும் எம்.ஏ.சி.டி., இன்னும் பாசிட்டிவாகவே இருப்பதால், தற்போதைய பலவீனம்தனை ஒரு குறுகியகால திருத்தமாகவே கருதலாம்.
ஆர்.எஸ்.ஐ., நடுநிலையில் இருப்பதோடு அல்லாமல், ஆர்.ஓ.சி., மற்றும் ஸ்டொக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர்கள் இறக்கத்திற்கான அறிகுறிகளை காட்டுகின்றன. எனவே, டெக்னிக்கல் சூழலானது நிப்டியில் பெரிய மாற்றம் இல்லாமலோ அல்லது சற்று இறக்கத்துடனோ இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
உடனடி சப்போர்ட்டானது 23,925ல் இருக்கிறது. அதற்கு அப்பால் 23,800ல் வலுவான சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் வந்தால் 24,050-24,150 லெவல்களில் வலுவான ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. 24,150-க்கு மேலே சென்றால் ஏற்றம் சற்று தொடரவும் 23,800க்கு கீழே சென்றால் இறக்கம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

