தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தேஜஸ் விமான விபத்து எதிரொலி; ஹெச்.ஏ.எல்., பங்கு 3.50% சரிவு

 தேஜஸ் விமான விபத்து எதிரொலி; ஹெச்.ஏ.எல்., பங்கு 3.50% சரிவு

 தேஜஸ் விமான விபத்து எதிரொலி; ஹெச்.ஏ.எல்., பங்கு 3.50% சரிவு


ADDED : பிப் 24, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேஜஸ் விமான விபத்து எதிரொலியாக, ஹெச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள், நேற்றைய வர்த்தக நேர முடிவில், 3.50 சதவீதம் குறைந்து, பங்கு ஒன்றின் விலை 4,025 ரூபாயாக சரிவை கண்டது.

கடந்த 7ம் தேதி இந்திய விமான படைக்கு சொந்தமான தேஜஸ் இலகுரக போர் விமானம், வழக்கமான பயிற்சியை முடித்து, தரையிறங்கும் போது, பிரேக் பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பலத்த சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக, விமானி உயிர் தப்பினார். இதையடுத்து, 30 தேஜஸ் போர் விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ள விமானப்படை, விரிவான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதையடுத்து, ஹெச்.ஏ.எல்., நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சரிந்தன.

கடந்த 2021, பிப்ரவரியில் ராணுவ அமைச்சகம், 48,000 கோடி ரூபாய்க்கு செலவில், இந்திய விமான படைக்கு, 83 'தேஜஸ் எம்.கே.,1ஏ' ரக விமானத்தை தயாரித்து, வினியோகிக்க ஹெச்.ஏ.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தேஜஸ் விமானங்கள் விபத்து



2024, மார்ச் - ராஜஸ்தான் ஜெய்சல்மார் அருகே விபத்து

2025, நவம்பர் - துபாயில் நடந்த விமான கண்காட்சியில் விபத்து

2026, பிப்ரவரி - பயிற்சியை முடித்து தரையிறங்கும்போது விபத்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us