தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது

 23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது

 23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது


ADDED : ஏப் 07, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 22,780.30 22,998.35 22,542.95 22,968.25

மதியம் 12.45 வரை இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், அதன் பின் ஏற ஆரம்பித்து, நாளின் இறுதியில் 255 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 1.06 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 2 குறியீடுகள் இறக்கத்துடனும்; 17 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 1.37 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் எக்ஸ்- பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 2.72 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,345 பங்குகளில், 2,511 ஏற்றத்துடனும்; 745 இறக்கத்துடனும்; 89 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் நடைபெறும் ஏற்றமானது, 'ஓவர் சோல்டு' எனும் நிலையில் இருந்து மீள்வதற்கு நடைபெறும் ஒரு 'புல்-பேக் ராலி'தான் என்பது டெக்னிக்கலாக தெரிகிறது. மொமெண்டம் குறியீடுகள் சீராகி வருவது தற்போதைய ஏற்றம் இன்னும் கொஞ்ச துாரம் செல்வதற்கான வாய்ப்பு மட்டுமே இருப்பதை காட்டுவதாக இருக்கிறது. இருப்பினும், தற்போதைய நிலைமையில், நிப்டி 23,400-க்கு மேலே சென்றால், இன்னமும் அதிக துாரம் மேல் நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது. அதே போல் 22,500-க்கு கீழே சென்றால், மீண்டும் இறக்கம் வந்துவிட வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

ஆதரவு 22,670 22,375 22,200

தடுப்பு 23,125 23,285 23,460

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 770.90 20.00

எட்டர்னல் 232.09 0.37

ரிலையன்ஸ் 1,306.00 -44.50

டாடா ஸ்டீல் 195.60 1.46

ஓ.என்.ஜி.சி., 281.35 -5.85

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 18.17 0.30

சுஸ்லான் எனர்ஜி 41.60 0.82

என்.எம்.டி.சி., 81.59 3.51

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 61.24 1.02

அசோக் லேலண்டு 150.70 2.26

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஆர்.பி.எல்., பேங்க் 317.00 16.00

பந்தன் பேங்க் 152.00 5.66

ஹிந்துஸ்தான் காப்பர் 502.80 7.65

என்.பி.சி.சி., இந்தியா 84.36 1.27

ஐநாக்ஸ் விண்டு 81.15 1.60

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

டி.சி.பி., பேங்க் 171.50 6.02

கெயில் (இந்தியா) 143.43 1.70

குஜராத் பிபாவாவ் போர்ட் 147.00 1.42

என்.சி.சி., 142.70 0.99

ஆர்.இ.சி., 327.40 2.60

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us