sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இறக்கம் நிற்க 26,010-க்கு மேல் அதிக வால்யூமுடன் வர்த்தகமாக வேண்டும்

/

 இறக்கம் நிற்க 26,010-க்கு மேல் அதிக வால்யூமுடன் வர்த்தகமாக வேண்டும்

 இறக்கம் நிற்க 26,010-க்கு மேல் அதிக வால்யூமுடன் வர்த்தகமாக வேண்டும்

 இறக்கம் நிற்க 26,010-க்கு மேல் அதிக வால்யூமுடன் வர்த்தகமாக வேண்டும்


ADDED : டிச 09, 2025 04:20 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 285.05 -7.35

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 386.90 -20.00

இண்டர்குளோப் ஏவியேஷன் 4,907.50 -463.00

டாடா ஸ்டீல் 163.50 -3.61

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 955.40 -16.10

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

சுஸ்லான் எனர்ஜி 51.69 -0.05

எஸ் பேங்க் 21.87 -0.73

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 79.00 -1.87

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 98.35 -5.16

என்.எம்.டி.சி., லிட். 74.50 -1.96

நிப்டி ஸ்மால் கேப் 50 (எண்ணிக்கை)

கேனெஸ் டெக்னாலஜி 3,851.50 -502.00

என்.பி.சி.சி., (இந்தியா) 107.79 -4.27

பந்தன் பேங்க் 135.65 -4.43

ஐநாக்ஸ் விண்ட் 124.39 -5.85

பிஜி எலெக்ட்ரோ பிளாஸ்ட் 529.80 -24.10

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

என்.எச்.பி.சி., லிட். 76.45 -0.62

ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் லிட் 765.00 9.60

நிப்பன் லைப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் 815.00 1.00

ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் 484.75 3.35

கேன் பின் ஹோம்ஸ் லிட் 910.75 9.95

குறியீடுகள்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 26,159.80 26,178.70 25,892.25 25,960.55

நிப்டி பேங்க் 59,672.05 59,713.15 59,030.60 59,238.55

நிப்டி

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்திலேயே நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 225 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.05 சதவிகித இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு, அதிகபட்சமாக 2.70 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 19-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதில் நிப்டி ஐ.டி., குறியீடு, குறைந்தபட்சமாக 0.29 சதவிகித இறக்கத்துடனும்; நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 3.53 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,246 பங்குகளில்; 579 ஏற்றத்துடனும், 2,579 இறக்கத்துடனும், 88 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 26,100- லெவலை எந்த வேகத்தில் தாண்டியதோ, அதே வேகத்தில் அதற்கு கீழே சென்றுவிட்டது. டெக்னிக்கலாக ஒரு சில இண்டிகேட்டர்கள் குறுகியகால பலவீனத்தை காட்ட ஆரம்பித்துள்ளன. தற்போதைய சூழலில் 25,800-லேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 26,100 என்பது மீண்டும் ரெசிஸ்டென்ஸாக மாறிவிட்டது. மீண்டும் இதை உடைத்து மேலே சென்றால் மட்டுமே ஏற்றம் வர வாய்ப்புள்ளது. செய்திகளைப்பொறுத்து சந்தையின் போக்கு அதி வேகமாக மாறும் சூழ்நிலையில் இருப்பதால், டெக்னிக்கலாக செய்யப்படும் கணிப்புகள் சரிவர செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனலாம். 26,010-க்கு மேலே சென்று வால்யூமுடன் நடந்தால் தற்போதைக்கு இறக்கம் நின்றுவிட்டதாக கருதலாம்.

ஆதரவு 25840 25720 25610

தடுப்பு 26120 26290 26400

நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் இருந்தே இறங்கத்துவங்கிய நிப்டி பேங்க் நாளின் இறுதியில் 538 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. டெக்னிக்கலாக குறுகிய கால அடிப்படையில் பார்த்தால் இறக்கம் சிறிது தொடர வாய்ப்புள்ளது. குறைந்த பட்சம் கன்சாலிடேஷனாவது நடக்கும் சூழலே டெக்னிக்கலாக தெரிகின்றது. இருப்பினும் செய்திகள் மிகவும் சாதகமாக இருந்து 59,350 என்ற லெவலுக்கு மேலே சென்று அதிக வால்யூமுடன் வர்த்தகம் நடந்தால் 59,620 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

ஆதரவு 58940 58640 58385

தடுப்பு 59620 60020 60270

*****






      Dinamalar
      Follow us