தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 24,000 புள்ளியில் ஆதரவு கிடைக்காவிட்டால் இறக்கம் தொடரக்கூடும்

 24,000 புள்ளியில் ஆதரவு கிடைக்காவிட்டால் இறக்கம் தொடரக்கூடும்

 24,000 புள்ளியில் ஆதரவு கிடைக்காவிட்டால் இறக்கம் தொடரக்கூடும்


UPDATED : ஆக 20, 2026 02:33 AM

ADDED : ஆக 20, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 02:33 AM ADDED : ஆக 20, 2026 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று இரண்டு புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி பின்னர் தொடர்ந்து இறங்க ஆரம்பித்து, நாளின் இடையே 125 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் நாளின் இறுதியில் 76 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 1 குறியீடு ஏற்றத்துடனும், 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மிட்கேப்50' குறியீடு மட்டும் 0.02 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தது.

'நிப்டி மிட்கேப்100' குறியீடு குறைந்தபட்சமாக 0.21 சதவீத சரிவுடனும், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.63 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 4 குறியீடுகள் உயர்வுடனும், 17 குறியீடுகள் சரிவுடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 0.73 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,609 நிறுவனங்களின் பங்குகளில் 1,320 ஏற்றத்துடனும் 2,171 இறக்கத்துடனும், 118 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., (42.22), ஆர்.ஓ.சி., (-2.81) போன்றவை நிப்டி தொடர்ந்து பலவீனமாக இருப்பதையே காட்டுகின்றன.

Image 1610794


ஸ்டாக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்கள் 'ஓவர்சோல்டு' நிலையில் இருப்பதால் ஒரு சிறிய ஏற்றம் வருவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்பு இருக்கிறது என்பது தென்படுகிறது. 24,000-24,050 லெவலில் உடனடி சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை தாண்டி இறங்கும் பட்சத்தில் 23,850-23,800 என்ற லெவல் வரை செல்ல வாய்ப்புள்ளது.

ஏற்றம் வந்தால் 24,200ஐ தாண்டினால் மட்டுமே அது தொடர வாய்ப்புள்ளது. 24,200ஐ தாண்டும் பட்சத்தில் 24,350-24,450 வரை செல்ல வாய்ப்புள்ளது. எனினும் குறுகிய கால அளவீட்டில் நிப்டி பலவீனமாகவே இருக்கிறது. மொத்தத்தில், 24,000-24,050-க்கு மேலே இருக்கும் வரைதான் நிப்டியில் சிறிய டெக்னிக்கல் ஏற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் 24,200ஐ கடந்து நிலைபெற்றால் மட்டுமே இந்த ஏற்றம் வலுபெற்று 24,350-24,450 வரை செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us