தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐபிஓ,

 ஐபிஓ,

 ஐபிஓ,


ADDED : செப் 23, 2026 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏஸ்வெக்டர்

'சா ப்ட் பேங்க்' ஆதரவு பெற்ற 'ஏஸ்வெக்டர்' நிறுவனம் பங்கு வெளியீடு வாயிலாக 420 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. 'ஸ்னாப்டீல், யுனிகாமர்ஸ் மற்றும் ஸ்டெல்லாரோ பிராண்ட்ஸ்' ஆகிய சேவைகளை தன்வசம் கொண்டு, இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

பங்கு விலை : ரூ.30 - 32

திரட்டும் நிதி :ரூ.420 கோடி

விண்ணப்பிக்கும் காலம் : செப்., 25 - 29

நோக்கம்: தொழில் விரிவாக்கம் மற்றும் தற்போதைய முதலீட்டாளர்கள் தங்களின் சில பங்குகளை விற்பனை செய்வது

ரன்வால் எண்டர்பிரைசஸ்

மு ம்பையை சேர்ந்த இந்நிறுவனம், வீடுகள், வர்த்தக வளாகங்கள், மால்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்களை கட்டும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறது.

பங்கு விலை : ரூ.290 - 305

திரட்டும் நிதி : ரூ.500 கோடி (முழுதும் புதிய பங்குகள்)

விண்ணப்பிக்கும் காலம் : செப்.,25 -29

நோக்கம் : பழைய கடன்களை அடைக்க, புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான இடங்களை கையகப்படுத்த மற்றும் பொதுவான நிறுவன செலவுகளுக்காகவும்.

ஓரியன்ட் கேபிள்ஸ்

இந் நிறுவனம் தொலைத்தொடர்பு, டேட்டா சென்டர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு தேவையான கேபிள்கள் மற்றும் மின்சார உபகரணங்களை தயாரித்து வருகிறது.

பங்கு விலை : ரூ.258 - 272

திரட்டும் நிதி : 552 கோடி

விண்ணப்பிக்கும் காலம் : செப்., 25 - 29

நோக்கம் : புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், உற்பத்தி ஆலை கட்டுமான பணிகள், நிறுவனத்தின் கடன்களை அடைத்தல் மற்றும் பொதுவான நிறுவன தேவைகளுக்காகவும்.

ஜெர்மன் கிரீன் ஸ்டீல்

கு ஜராத்தை சேர்ந்த இந்நிறுவனம் டி.எம்.டி., பார்கள், எம்.எஸ்., பில்லெட்டுகள் மற்றும் ஸ்பான்ஜ் அயர்ன் போன்ற ஸ்டீல் பொருட்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

பங்கு விலை : ரூ.132 - ரூ.139

திரட்டும் நிதி : ரூ.304 கோடி

விண்ணப்பிக்கும் காலம் : செப்., 25 - 29

நோக்கம் : குஜராத் கட்ச் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கும், கடன்களை திரும்ப செலுத்தவும் மற்றும் நிறுவன செலவுகளுக்காகவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us