ADDED : ஏப் 10, 2026 12:32 AM

சரிவுக்கான 10 முக்கிய காரணங்கள்
தொடர்ந்து 5 நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று சரிவை சந்தித்தன. போர் பதற்றங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தக நிறைவில், சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிந்து, 76,631 புள்ளிகளிலும்; நிப்டி 222 புள்ளிகள் இறங்கி, 23,775 புள்ளிகளிலும் முடிவடைந்தன. பேங்க் நிப்டி கிட்டதட்ட 2 சதவீதம் சரிந்தது. பங்கு சந்தைகள் சரிந்தபோதும், 'நிப்டி ஸ்மால்கேப் 100 இண்டெக்ஸ்' 0.30 சதவீதம் ஏற்றம் கண்ட நிலையில், 'நிப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ்' மாற்றம் இல்லாமல் நிலைபெற்றிருந்தது.
1.லெபனான் மீதான தாக்குதலால் முதலீட்டாளர்கள் அச்சம்
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 97 டாலருக்கும் மேல் உயர்ந்தது
3.ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் சரிவை சந்தித்தது
4.அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகள் விற்பனை செய்வது
5.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
6.சந்தை அபாயத்தை குறிக்கும் இந்தியா வி.ஐ.எக்ஸ்., குறியீடு 3% உயர்ந்தது
7.சென்செக்ஸ் முன்பேர வர்த்தக ஒப்பந்தங்கள் காலாவதி
8.முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்தது
9.வர்த்தக துவக்கத்தில் ஐ.டி., துறை பங்குகள் சரிவு
10முன்னணி வங்கி பங்குகள் சரிவு
