தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை படிப்படியாக பலம் பெற்று வருகிறது

 சந்தை படிப்படியாக பலம் பெற்று வருகிறது

 சந்தை படிப்படியாக பலம் பெற்று வருகிறது


ADDED : மே 26, 2026 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 01:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

நேற்று துவக்கத்தில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட நிப்டி, நாளின் இறுதியில் 312 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டிமிட்கேப் 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.84 சதவீதமும்; ' நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.60 சதவீத அதிகரித்து முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 20 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு இறக்கத்துடனும் காணப்பட்டன.

இவற்றில், 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு குறைந்தபட்சமாக 0.22 சதவீத உயர்வுடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 2.90 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு மட்டும் 0.18 சதவீதம் குறைந்து முடிந்தது.

வர்த்தகம் நடந்த 3,419 நிறுவனங்களின் பங்குகளில், 2,270 பங்குகள் உயர்வுடனும்; 1,045 குறைந்தும்; 104 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி ஏற்றம் கண்டதை தொடர்ந்து, மொமெண்டம் இண்டிகேட்டர்களில் முன்னேற்றம் தென்பட தொடங்கியுள்ளது. எனவே, குறுகியகால அளவீட்டில் காளைகளின் கட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், 200 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) கீழேதான் நிப்டி இருக்கிறது. 23,850-ல் உடனடி சப்போர்ட்டையும், 24,250-ல் உடனடி ரெசிஸ்டென்ஸையும் கொண்டிருக்கும் நிப்டி, செய்திகள் சாதகமாக இருந்தால் 24,250-க்கு மேல் நிலைத்து, அடுத்த கட்ட ஏற்றத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

ஆதரவு 23,950 23,870 23,820

தடுப்பு 24,085 24,140 24,190

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us