ADDED : செப் 15, 2026 03:29 AM

55,000
வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட 147 சுரங்கங்கள் வாயிலாக 55,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது
1033
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவி எண் 1033ஐ ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் இணைத்து, அழைப்பவரின் இருப்பிடத்தை உடனடியாக கண்டறியும் வசதி இடம்பெற உள்ளது
25
உற்பத்தி துறையை 2040க்குள் 25% ஆக உயர்த்த வேண்டும் என்றால், ஆண்டுதோறும் 10% வளர்ச்சி அவசியம் என பாங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் ஆய்வில் தகவல்
5
மொபைல் போன்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கும்படி இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் கோரிக்கை
500
போயிங்கிடம் இருந்து 500 கோடி ரூபாயை திரும்ப பெறக் கோரி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
