தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க என்.எஸ்.இ., கேட்ட பெயர் 'ஓகே'

 நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க என்.எஸ்.இ., கேட்ட பெயர் 'ஓகே'

 நிலக்கரி எக்ஸ்சேஞ்ச் துவங்க என்.எஸ்.இ., கேட்ட பெயர் 'ஓகே'


ADDED : ஏப் 14, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்திய நிலக்கரி துறையில் வெளிப்படையான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தனது நிலக்கரி வர்த்தகத்துக்கான எக்ஸ்சேஞ்சுக்கு 'நேஷனல் கோல் எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட்' என்ற பெயரை பயன்படுத்த மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் இருந்து என்.எஸ்.இ., அனுமதி பெற்றுள்ளது.

இதுகுறித்து என்.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்நிறுவனத்துக்காக 'நேஷனல் கோல் எக்ஸ்சேஞ்ச், பாரத் கோல் எக்ஸ்சேஞ்ச் மற்றும் இந்தியா கோல் எக்ஸ்சேஞ்ச்' என மூன்று பெயர்களை பரிந்துரை செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் கோல் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா என்ற பெயருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும், புதிய நிறுவனத்திற்காக 100 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் என்.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இதில், என்.எஸ்.இ., 60 சதவீத பங்குகளையும், பிற பங்குதாரர்கள் 40 சதவீத பங்குகளையும் கொண்டிருப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பிடம் இதற்கான முறையான உரிமம் பெற விரைவில் விண்ணப்பிக்கப்படும் என என்.எஸ்.இ., தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us