தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு


UPDATED : பிப் 28, 2026 06:58 AM

ADDED : பிப் 28, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 06:58 AM ADDED : பிப் 28, 2026 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், 3:00 மணியளவில் வேகமான இறக்கம் கண்டு, நாளின் இறுதியில் 317 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 1.04 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.28 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1542250 துறை சார்ந்த குறியீடுகளில், 16 குறியீடுகள் இறக்கத்துடனும்; 3 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.26 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.60 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,236 பங்குகளில், 1,139 ஏற்றத்துடனும்; 1,992 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி அனைத்து குறுகியகால சராசரிகளுக்கும் கீழே நிறைவடைந்துள்ளது.Image 1542251

மொமெண்டம் இண்டிகேட்டர்கள் இறக்கம் இன்னும் சற்று தொடர வாய்ப்பிருக்கிறது என்ற டெக்னிக்கல் சூழலையே காட்டுகிறது. தற்போதைய சூழலில் நிப்டி 25,000 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும், செய்திகள் சாதகமாக இருந்தால், நிப்டி சுலபமாக மீண்டும் மேல்நோக்கி நகர்வதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us