UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:32 PM
சமீபத்திய சரிவுகளுக்கு பி;ன இந்திய பங்கு சந்தை மீண்டுவர முயலும் சூழலில், வரவிருக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிப்டி ஏற்றம் பெற வாய்ப்புள்ளதாக ‘சாம்கோ செக்யூரிட்டிஸ்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தரவுகள்
கடந்த 25ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, நவம்பர் மாதத்தில் நிப்டி சராசரியாக 2.50 சதவீதம் லாபத்தையும் (60% முறை ஏற்றம்), டிசம்பரில் சராசரியாக 2.60 சதவீதம் லாபத்தையும் (68% முறை ஏற்றம்) பதிவு செய்துள்ளது.
கணிப்புகள்
1 தீபாவளி பண்டிகையால் தொடர்ந்து நீடிக்கும் நுகர்வோர் தேவை, வாகன உற்பத்தி, ரீடெய்ல் மற்றும் விருந்தோம்பல் துறைகளின் விற்பனையையும் சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்கும்
2 சந்தை சரிவால் முன்னணி பங்குகளின் விலை நியாயமான நிலைக்கு வந்துள்ளதால், புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும்
3 பெருநிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் ஆண்டிறுதி போர்ட்போலியோ மறுசீரமைப்பு சந்தைக்கு வலு சேர்க்கும்
4 ஜூலை – செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளுக்கு பின், நிறுவனங்களின் எதிர்கால லாப வளர்ச்சி குறித்த தெளிவு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.
