உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 06, 2026 03:31 AM

அ நிறம் | அளவு
பழைய வருமான வரி முறை உடனடியாக நிறுத்தப்படாது என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் தெரிவித்துள்ளார்.
தற்போது பழைய வரி முறையை முழுமையாக நீக்கும் எந்த திட்டமும் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
புதிய வரி முறை எளிமையாகவும், குறைந்த வரி விகிதங்களுடனும் இருப்பதால், பலர் அதை விரும்பி தேர்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
இருப்பினும், வருமான வரி தாக்கல் செய்பவர்கள் விரும்பினால் புதிய முறையையோ அல்லது பழைய முறையையோ தேர்வு செய்யும் சுதந்திரம் தொடரும் என்றும் தெரிவித்தார். தற்போது கிட்டத்தட்ட 88 சதவீத தனிநபர்கள் புதிய வரி முறையை பயன்ப டுத்தி வருகின்றனர்.
