தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 22,200-ல் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது

 22,200-ல் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது

 22,200-ல் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது


ADDED : மார் 31, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

ஆரம்பத்தில் கணிசமாக இறங்கி, சிறிது நேரத்தில் ஓரளவுக்கு இழந்த புள்ளிகளை மீட்டு, அதன் பின் தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 488 புள்ளிகள் சரிவுடன் நிப்டி நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு, குறைந்தபட்சமாக 2.14 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 2.90 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு குறைந்தபட்சமாக 0.21 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு, அதிகபட்சமாக 4.56 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,410 பங்குகளில், 570 ஏற்றத்துடனும்; 2,762 இறக்கத்துடனும்; 78 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. இறக்கம் சற்று நிற்பதற்கான வாய்ப்பு உருவாகிற தோற்றம் டெக்னிக்கலாக தெரிகிறது. போர் குறித்த செய்திகளே இதனை உறுதி செய்யும் என்பதால், டெக்னிக்கல்கள் கொண்டு செய்யப்படும் கணிப்புகளின்படி சந்தை நிகழ்வுகள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்சமயம் 22,200 சப்போர்ட்டாகவும்; 23,200 ரெசிஸ்டென்ஸாகவும் உள்ளது. தற்போதைய சூழலில் 22,200 லெவலில் சப்போர்ட் கிடைத்துவிட்டால், சிறியதொரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். அப்படி ஏற்றம் வந்தாலுமே, 23,200ஐ தாண்டாதவரை டிரெண்ட் மாறிவிட்டது என்று கூறுவதற்கில்லை.

ஆதரவு 22,150 22,000 21,850

தடுப்பு 22,600 22,875 23,050

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 735.00 - 21.20

எட்டர்னல் 229.20 - 3.97

டாடா ஸ்டீல் 191.59 - 1.63

ஓ.என்.ஜி.சி., 284.90 2.95

கோட்டக் மஹிந்திரா பேங்க் 353.00 - 13.15

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 17.28 - 0.84

சுஸ்லான் எனர்ஜி 39.61 - 1.21

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 84.16 - 4.93

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 58.85 - 3.02

அசோக் லேலண்டு 154.46 - 8.63

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஹிந்துஸ்தான் காப்பர் 453.00 - 40.45

என்.பி.சி.சி., (இந்தியா) 77.74 - 2.79

ஐநாக்ஸ் விண்டு 75.40 - 3.87

பந்தன் பேங்க் 141.07 - 7.84

ஏஞ்சல் ஒன் 228.70 - 6.57

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

அர்விந்த் பேஷன்ஸ் 405.00 22.55

ஜெனரல் இன்சூரன்ஸ் 363.75 0.70

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் 496.30 - 9.75

ஆயில் இந்தியா 471.00 - 7.00

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 150.98 4.51

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us