தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ரூபாய் சொத்துகளில் முதலீடு செய்ய இதுவே சரியான காலம்

 ரூபாய் சொத்துகளில் முதலீடு செய்ய இதுவே சரியான காலம்

 ரூபாய் சொத்துகளில் முதலீடு செய்ய இதுவே சரியான காலம்


ADDED : மே 24, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்குகள், பத்திரங்கள் என ரூபாய் சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்வதற்கு இது உகந்த காலம் என்று 'டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான 5 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

காரணங்கள்  'உண்மையான, பயனுள்ள மாற்று விகிதம்' அடிப்படையில், ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளதால், ரூபாய் சார்ந்த சொத்து முதலீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.

 இந்தியா -- அமெரிக்கா இடையிலான பணவீக்க வேறுபாடு வெகுவாக குறைந்துள்ளதால், ரூபாயின் நீண்டகால சரிவு விகிதம் குறையும்.

 இந்தியாவின் சேவை ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் ஆகியவை வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட உதவுகின்றன.

 முன்னணி 'லார்ஜ்கேப்' பங்குகள் தற்போது குறைவான விலையில் கிடைப்பதுடன், தொடர்ச்சியாக 18- - 20% அளவில் 'ரிட்டன் ஆன் ஈக்விட்டி'யும் தருகின்றன.

 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதும், அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும் வழக்கமான சுழற்சிகளே தவிர நிரந்தர பிரச்னை அல்ல.

ரூபாய் சொத்து

ரூபாய் சொத்துகள் என்பவை, நம் நாட்டின் ரூபாயில் மதிப்பிடப்படும் முதலீடுகள், சொத்துக்கள் அல்லது நிதிக் கருவிகள். அவை இந்தியாவின் நிதி அமைப்பில் உள்ள செல்வத்தை பிரதிபலிக்கின்றன. பங்குகள், பத்திரங்கள் முதல் அசையா சொத்துகள் மற்றும் ரொக்கம் வரை இவை குறிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us