எப் அண்டு ஓ., எக்ஸ்பைரிக்கான நகர்வுகளே இன்று இருக்கும்
எப் அண்டு ஓ., எக்ஸ்பைரிக்கான நகர்வுகளே இன்று இருக்கும்
ADDED : அக் 28, 2025 12:12 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,843.20 26,005.95 25,827.00 25,966.05
நிப்டி பேங்க் 57,796.45 58,224.55 57,652.75 58,114.25
நிப்டி
நாள் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிப்டி, நாளின் இறுதியிலும் 170 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 16 குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 1.37% ஏற்றத்துடனும்; குறைந்தபட்சமாக 'நிப்டி நெக்ஸ்ட்50' குறியீடு 0.37% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 12 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும்; ஒன்று மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி பிஎஸ்யு பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 2.22% ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.26% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,241 பங்குகளில் 1,637 ஏற்றத்துடனும்; 1,504 இறக்கத்துடனும், 100 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி இன்னும் புல்லிஷ்ஷாக 52 வார உச்சத்துக்கு அருகே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு சில இண்டிகேட்டர்கள் ஓவர்-பாட் என்ற நிலைமையை காண்பித்தாலும், என்.எஸ்.இ-.,யில் அக்டோபர் மாத எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் எக்ஸ்பைரி தினமாகிய இன்று டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு கணிக்கப்படும் ஆதரவு மற்றும் தடுப்பு லெவல்கள் சரிவர இருக்காத அளவுக்கு, அதனுடைய தாக்கம் சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆதரவு 25,860 25,750 25,680
தடுப்பு 26,040 26,110 26,175
நிப்டி பேங்க்
நாளில் பலமுறை ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் 3.15 மணிக்கு மேல் நல்லதொரு ஏற்றம் கண்டு இறுதியில் 414 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஓவர் பாட் இண்டிகேட்டர்களை புறந்தள்ளி, நிப்டி பேங்க் புல்லிஷாக இருக்கிறது. நாளின் இறுதியில் நல்லதொரு இறக்கத்தோடு நிறைவடைந்தால் மட்டுமே, இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆதரவு 57,765 57,420 57,200
தடுப்பு 58,335 58,560 58,780
புள்ளி விவரங்கள்
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எட்டர்னல் 333.35 6.75 2,77,03,118 57.38
டாடா ஸ்டீல் 176.61 2.17 2,38,32,477 48.80
எச்.டி.எப்.சி., பேங்க் 1,003.50 8.75 1,57,00,796 69.27
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,483.20 31.60 1,41,13,867 68.43
பவர்கிரிட் கார்ப்போரேஷன் 291.00 2.50 1,33,96,182 72.94
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எஸ் பேங்க் 22.77 0.10 8,12,75,519 42.73
இண்டஸ்டவர் 373.50 11.95 2,68,26,730 42.14
சுஸ்லான் 53.71 -0.11 2,47,19,719 46.42
பெடரல் பேங்க் 233.82 6.42 2,17,64,115 51.33
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 78.01 -0.19 2,05,61,033 50.20
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
பர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் 352.00 25.65 1,88,01,284 13.49
இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 147.00 -0.05 75,57,240 43.44
பந்தன் பேங்க் 172.35 2.35 68,64,109 53.38
பூனாவாலா பின்கார்ப் 492.00 7.45 61,05,370 28.14
சி.இ.எஸ்.சி., லிட் 180.08 1.43 51,78,564 45.03
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
அமரராஜா எனர்ஜி 1,001.00 62.31 3,08,511
அசோகா பில்ட்கான் 193.85 58.29 5,39,435
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் 166.02 42.27 9,52,847
ஆயில் இந்தியா 421.60 36.42 16,84,230
கிரீவ்ஸ் காட்டன் 212.85 27.45 61,78,929
*****

