தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்கம், வெள்ளிக்கு கூடுதல் மார்ஜின் குறைப்பு கட்டணம் குறைந்ததால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

 தங்கம், வெள்ளிக்கு கூடுதல் மார்ஜின் குறைப்பு கட்டணம் குறைந்ததால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

 தங்கம், வெள்ளிக்கு கூடுதல் மார்ஜின் குறைப்பு கட்டணம் குறைந்ததால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி


ADDED : பிப் 20, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கம், வெள்ளி முன்பேர வர்த்தகத்துக்கு, ஏற்கனவே விதித்திருந்த கூடுதல் மார்ஜின் கட்டணத்தை, எம்.சி.எக்ஸ்., மற்றும் என்.எஸ்.இ., ஆகியவை திரும்ப பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நடப்பாண்டின் தொடக்கத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதீத ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.

இதனால் சந்தையில் ஏற்படும் அதிகப்படியான அபாயத்தை கட்டுப்படுத்த, கடந்த பிப்., 4ம் தேதி முதல் தங்கம் வர்த்தகத்துக்கு 3 சதவீதம் மற்றும் வெள்ளி வர்த்தகத்துக்கு 7 சதவீதம் கூடுதல் மார்ஜின் கட்டணத்தை பங்குச் சந்தைகள் விதித்தன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நிலவி வந்த பதற்றம் தணிந்து, விலை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

சந்தை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், முன்பு விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சி.எம்.இ., போன்ற சந்தைகளிலும் மார்ஜின் தொகை மாற்றப்பட்டு வருவதையடுத்து, இந்தியாவிலும் இந்த நடவடிக்கையை சந்தைகள் எடுத்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us