இன்போசிஸ் பை பேக் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இரண்டு லாபங்கள்
இன்போசிஸ் பை பேக் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இரண்டு லாபங்கள்
ADDED : செப் 13, 2025 12:05 AM

இ ந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், 18,000 கோடி ரூபாய் மதிப்புக்கு, பங்குகள் 'பை பேக்' செய்யப் போவதாக அறிவித்துள்ளது, அதுவும் ஒரு பங்கின் விலை 1,800 ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளது, முதலீட்டாளர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாழன் நிலவரப்படி, ஒரு இன்போசிஸ் பங்கின் விலை 1,512.20 ரூபாய் தான். அப்படியானால், ஒரு பங்குக்கு, கிட்டத்தட்ட 19 சதவீத லாபம் கிடைக்கும்.
இந்த வகையில், 10 கோடி பங்குகளைத் திரும்பப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரெகார்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதாவது, எந்தத் தேதி வரை இன்போசிஸ் பங்குகளை கையில் வைத்திருப்போர் 'பை பேக்' திட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர் என்பதைக் குறிப்பதே ரெகார்டு தேதி.
கடந்த எட்டு ஆண்டுகளில் இன்போசிஸ் மேற்கொள்ளும் ஐந்தாவது 'பை பேக்' திட்டம் இது. ஒவ்வொரு முறையும், முதலீட்டாளர்களுக்கு 18 முதல் 30 சதவீதம் வரை லாபம் கிடைத்துள்ளது.
இந்த பைபேக் காரணமாக முதலீட்டாளர்களுக்கு இரண்டு பயன்கள். ஒன்று, பங்குகளை நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு, நல்ல லாபத்தை ஈட்டலாம். இரண்டு, 'பை பேக்'குக்கு பின், பங்குகளின் எண்ணிக்கை குறைவதால், பங்கு மதிப்பு அதிகரிக்கும்
இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, டி.சி.எஸ். விப்ரோ ஆகிய நிறுவனங்களும் பங்குகள் 'பை பேக்' திட்டங்களை அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.
1பங்குகளை நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு, நல்ல லாபத்தை ஈட்டலாம்.
2'பை பேக்'குக்கு பின், பங்குகளின் எண்ணிக்கை குறைவதால், பங்கு மதிப்பு அதிகரிக்கும்