ADDED : மே 11, 2026 02:31 AM

'வாரீ எனர்ஜிஸ்' 1தவிகிதம் உயர வாய்ப்பு 'மோதிலால் ஓஸ்வால்' கணிப்பு
'வாரீ எனர்ஜிஸ்' நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, சந்தையில் இந்த பங்கின் விலையைவிட 19 சதவீதம் கூடுதல் உயர்வுடன், 3,850 ரூபாய் வரை செல்லும் என 'மோதிலால் ஓஸ்வால்' கணித்துள்ளது.
இதற்கு, அரசின் 'பி.எம். சூர்யா கர், மற்றும் குசும்' போன்ற திட்டங்களால் சூரியசக்தி மேற்கூரை அமைப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுதவிர, செல்கள் முதல் பேட்டரிகள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரிக்கும் ஒருங்கிணைந்த ஆலை, 2028க்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு தொழிற்சாலை ஆகியவை அமைப்பதற்கான திட்டங்கள் போன்ற சாதகமான காரணங்களால், முதலீட்டாளர்கள் இந்த பங்கை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை சற்றே விலை அதிகரித்து 3,229 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
