sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஒன்றை சொல்லி, வேறு ஒன்றுக்கு செலவழித்தால்? பி.எப்., பணத்தை எடுப்பது குறித்து எச்சரிக்கை

/

ஒன்றை சொல்லி, வேறு ஒன்றுக்கு செலவழித்தால்? பி.எப்., பணத்தை எடுப்பது குறித்து எச்சரிக்கை

ஒன்றை சொல்லி, வேறு ஒன்றுக்கு செலவழித்தால்? பி.எப்., பணத்தை எடுப்பது குறித்து எச்சரிக்கை

ஒன்றை சொல்லி, வேறு ஒன்றுக்கு செலவழித்தால்? பி.எப்., பணத்தை எடுப்பது குறித்து எச்சரிக்கை


ADDED : செப் 24, 2025 02:28 AM

Google News

ADDED : செப் 24, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் இருந்து எந்தெந்த காரணங்களுக்காக பணம் எடுக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளதோ, அதற்கு மட்டுமே பணத்தை எடுத்துப் பயன்படுத்த வேண்டும்; அதற்கு மாறாக பயன்படுத்தினால், அந்தப் பணம் மீண்டும் அபராதத்துடன் வசூல் செய்யப்படும்” என கடும் எச்சரிக்கை வழங்கி உள்ளது இ.பி.எப்.ஓ., நிறுவனம்.

வீடு வாங்குவது, கட்டுவது, புதுப்பிப்பது, கடன் பாக்கியைச் செலுத்துவது, அவசர மருத்துவ தேவைகள் போன்ற சிலவற்றுக்கு பி.எப்., கணக்கில் இருந்து பகுதியளவு பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கும் ஒருசில நிபந்தனைகளும், அதிகபட்சம் பணம் எடுக்கக்கூடிய வரம்பும் இருக்கின்றன.

ஒருசிலர் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவும் தங்களுடைய, அல்லது தங்கள் மகன், மகள் திருமணத்துக்காகவும் பி.எப்., இருந்து பணம் எடுப்பர்.

விதிகள் சொல்வது என்ன?


ஆனால், இதில் குறிப்பிட்டுள்ள வரையறைகளை மீறி, சிலர் எடுக்கும் பணத்தை வேறு விதங்களில் செலவு செய்துவிடுவதும் நடப்பதுண்டு.

அதாவது, வீடு கட்டுவதற்காக என கூறி வாங்கும் பணத்தை, எங்கேனும் தொழில் முதலீடு செய்வது, சுற்றுலா போவது, ஆடம்பர பொருட்கள் வாங்குவது என செலவு செய்துவிடுவதுண்டு.

இத்தகைய மீறல்களில் ஈடுபடுவோரிடம் இருந்து, அபராதத்தோடு பணத்தை மீண்டும் வசூல் செய்வதற்கான அதிகாரம் பி.எப். நிறுவனத்துக்கு உள்ளது.

இது குறித்து, இ.பி.எப். ஸ்கீம் 1952படி, 'பி.எப். பணத்தை எடுத்த ஒரு உறுப்பினர், வரையறை செய்யப்பட்ட காரணத்துக்கு அப்பால் செலவு செய்திருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் பணம் எடுக்க முடியாது.

அல்லது முன்பு எடுக்கப்பட்ட பணத்தை, அபராதத்துடன் வசூல் செய்யும் வரை, மீண்டும் பணம் எடுக்க அனுமதி இல்லை' என்று சொல்லப்பட்டு உள்ளது.

அரசின் அச்சம்


இ.பி.எப்.எப்., 3.0 என்ற பி.எப்.,க்கான புதிய தளர்வுகளை மத்திய அரசு விரைவில் துவங்க இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள் தங்கள் பி.எப்., சேமிப்பை, வழக்கமான வழிமுறைகளில் இல்லாமல், ஏ.டி.எம். இருந்தோ, யு.பி.ஐ.,வாயிலாகவோ எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்படவிருக்கிறது.

இப்படி செய்யும் போது, உறுப்பினர்கள், தங்கள் ஓய்வுக்கால சேமிப்பின் மதிப்பும் முக்கியத்துவமும் தெரியாமல், பல்வேறு ஆடம்பரச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள கூடும் என்ற அச்சமும் மத்திய அரசிட ம் இருக்கிறது.

அதனால் தான், பி.எப்., பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் வலியுறுத்த துவங்கி உள்ளது இ.பி.எப்.ஓ., நிறுவனம்.

Stock illustration ID:165810603

-----------------------------------------------வரையறை செய்யப்பட்டுள்ளதற்கு மாறாக பணத்தை பயன்படுத்தினால், மீண்டும் அபராதத்துடன் வசூல் செய்யப்படும்






      Dinamalar
      Follow us