sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?


UPDATED : ஜன 08, 2026 02:35 AM

ADDED : ஜன 08, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2026 02:35 AM ADDED : ஜன 08, 2026 02:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி


காலையில் இருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, மதியம் அடுத்தகட்ட இறக்கத்தை சந்தித்து, பின்னர் மீண்டும் நாளின் இறுதியில், 37 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16ல் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும் 1 குறியீடு இறக்கத்துடனும் 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு அதிகபட்சமாக 0.79 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி100 குறியீடு 0.10 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1518602 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும் 7 குறியீடுகள் இறக்கத்துடனும் 2 குறியீடுகள் மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்ஸ்மால் ஐடி & டெலிகாம் குறியீடு அதிகபட்சமாக 2.37 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1518603வர்த்தகம் நடந்த 3,246 பங்குகளில் 1,578 ஏற்றத்துடனும், 1,550 இறக்கத்துடனும், 118 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 25,900 என்ற லெவலுக்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவே. ஒரு வேளை இதை தாண்டி இறங்கினாலும் 25,700-வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 25,700க்கு கீழே சென்றால் மட்டுமே, நிப்டி பலவீனமடைகிறது என்று கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us