தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 8.50 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் செபி முடிவால் பாதிக்கப்படுமா?

 8.50 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் செபி முடிவால் பாதிக்கப்படுமா?

 8.50 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் செபி முடிவால் பாதிக்கப்படுமா?


ADDED : மார் 02, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகள் மற்றும் ஓய்வூதியத்துக்கான மியூச்சுவல் பண்டுகளை உடனடியாக நிறுத்த செபி உத்தரவிட்டுள்ளதால், 8.5 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் பாதிக்கக்கூடும் என. துறை சார்ந்த உயரதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கியப் பாதிப்புகள் என அவர்கள் பட்டியலிடுவது:



* சொல்யூஷன் ஓரியன்டட் பண்டுகள் நிறுத்தப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு அல்லது திருமணத்துக்காகவும், ஓய்வூதியத்துக்காகவும் தொடர்ந்து செலுத்தி வரும் மாதாந்திர முதலீட்டு திட்டங்கள், கிட்டதட்ட 8.5 லட்சம் கணக்குகள் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது

* இந்தத் திட்டங்களில் உள்ள குறிப்பிட்ட லாக் - இன் கட்டுப்பாடுகளும், இலக்கை மையமாக கொண்ட அமைப்பும் முதலீட்டாளர்களிடையே ஒரு நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியது. இப்போது திடீரென இந்த திட்டங்கள் மாற்றப்படுவது அவர்களின் நம்பிக்கையை பாதிக்கலாம்

* இந்த திட்டங்களை மூடுவதும், அவற்றை மற்ற திட்டங்களுடன் இணைப்பதும் தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் உடன்பாடான ஒன்றாக இருக்காது

* இதுவரை 41 திட்டங்களின் கீழ் 57,000 கோடி ரூபாய் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவை மற்ற திட்டங்களுடன் இணைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த நோக்கம், சிதைந்துவிடுமோ என அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், செபி அறிமுகப்படுத்தியுள்ள 'லைப் சைக்கிள் பண்டு' மியூச்சுவல் பண்டு துறைக்கு நீண்டகால தேவையாக இருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலீடு செய்ய முதலீட்டாளருக்கு இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உள்ளன என்பதை பொறுத்து, நிதி திட்டத்திலேயே முதலீட்டு ஒதுக் கீடு செய்யப்படுவதால், இவை மிகவும் பொருத்தமானவை. மேலும், இவை குறைந்த வரியில் லாபம் ஈட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, தவறான முறையில் விற்பனை செய்யப்படும் அபாயத்தையும் குறைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us