தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 100 ஆக வீழ்ச்சி அடையுமா? மத்திய அரசு அதிகாரிகள் தகவல்

 ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 100 ஆக வீழ்ச்சி அடையுமா? மத்திய அரசு அதிகாரிகள் தகவல்

 ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 100 ஆக வீழ்ச்சி அடையுமா? மத்திய அரசு அதிகாரிகள் தகவல்


ADDED : ஏப் 08, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 12:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் ரூபாய் மதிப்பு தற்போது சரியான நிலையில் இல்லை என்றாலும், அதன் மதிப்பு 100ஆக வீழ்ச்சியடைய வாய்ப்பே இல்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈ ரான் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாய் மதிப்பு கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு தற்போதைய 92.50 முதல் 94 என்ற வரம்புக்குள்ளேயே நீடிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய மேற்காசிய மோதலுக்கு பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 4 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது. நேற்று, வர்த்தக நேரத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92.90 முதல் 93.30 என்ற அளவில் ஊசலாடிய நிலையில், இறுதியில் 93ஆக நிலைபெற்றது.

இது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:

ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பை ஒரு குறிப்பிட்ட நிலையில் தற்காப்பதை விட, சந்தையில் ஏற்படும் அதீத ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளது.

ரூபாய் மதிப்பு 95ஐ தாண்டும்போது மட்டுமே, ரிசர்வ் வங்கி சந்தையில் நேரடியாக தலையிட்டு சரிவை சீர்செய்யும். ஏற்கனவே, மார்ச் 30 அன்று ரூபாய் மதிப்பு 95ஐ தாண்டியபோது ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

தற்போதைய உலகளாவிய சூழலில் ரூபாய் மதிப்பு சரிந்தாலும், அது 100 என்ற நிலையை எட்ட வாய்ப்பே இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், ரூபாய் மதிப்பு பெரிய அளவில் வீழ்ச்சியடையாது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரூபாய் மதிப்பு 95ஐ தாண்டும்போது மட்டுமே, ரிசர்வ் வங்கி சந்தையில் நேரடியாக தலையிட்டு

சரிவை சீர்செய்யும்

சரிவில் ரூபாய் மதிப்பு தேதி ரூபாய் மதிப்பு (2026) 2, மார்ச் 91.45 10, மார்ச் 92.01 16, மார்ச் 92.39 20, மார்ச் 93.34 27, மார்ச் 94.59 30, மார்ச் 95. 22 ( அதிகபட்ச வீழ்ச்சி) 2, ஏப்ரல் 93.20 7, ஏப்ரல் 93.00



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us