உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 17, 2026 12:20 AM

அ நிறம் | அளவு
'விப்ரோ' நிறுவனம் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு பங்குக்கு 250 ரூபாய் என்ற விலையில், கிட்டத்தட்ட 60 கோடி பங்குகள் வாங்கப்பட உள்ளன. இது, நேற்றைய சந்தை விலையைவிட கிட்டத்தட்ட 18 சதவீதம் அதிகமாகும். நேற்று, பி.எஸ்.இ.,யில் விப்ரோ நிறுவன பங்கு ஒன்றின் விலை 210.20 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
பங்குதாரர்களின் அனுமதியை பெற்றவுடன், வரும் 2027ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் பங்குகள் திரும்ப பெறப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
