ADDED : பிப் 25, 2026 01:14 AM

மி கச் சிறிய தொகையிலேயே வெள்ளியில் முதலீடு செய்யும் வகையில்,'பேடிஎம்' செயலியில் 'சில்வர் சேவிங்க்ஸ்' என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பேடிஎம், தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' இதை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, பயனர்கள் 20 ரூபாய் முதல் வெள்ளி வாங்கவும் விற்கவும் முடியும். வாங்கப்படும் வெள்ளி 'எம்.எம்.டி.சி.,பேம்ப்' நிறுவனம் வாயிலாக வழங்கப்பட்டு, காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான வாலட்களில் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் வெள்ளியின் நேரடி சந்தை விலை காண்பிக்கப்படும். வாங்கும்போது வரிகள் தனியாக காட்டப்படும்.
யு.பி.ஐ., நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தி முதலீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த எம்.எம்.டி.சி., நிறுவனத்துடன் எம்.எம்.டி.சி.,பேம்ப், கூட்டு வைத்துள்ளது.
வாடிக்கையாளர் வெள்ளியை டெலிவரி எடுக்க விரும்பினால், அதனை நாணயம் அல்லது பார் வெள்ளி வடிவில் மாற்றி, எம்.எம்.டி.சி.,பேம்ப் நிறுவனம் கூரியர் மூலம் அனுப்பி வைக்கும்.
இதில், பேடிஎம் வாங்கி, விற்பதற்கான செயலியாக மட்டுமே செயல்படும்.

