UPDATED : ஏப் 18, 2026 12:13 AM
ADDED : ஏப் 18, 2026 12:12 AM

செபியின் 'ரன்னிங் அக்கவுன்ட்' விதிகளின்படி, பங்கு வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படாமல் புரோக்கர் கணக்கில் இருக்கும் முதலீட்டாளர்கள் பணம், அவர்களது வங்கி கணக்குகளுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும். அதன்படி, முதல் காலாண்டில் முதலீட்டாளர்கள் கணக்குகளுக்கு ஏப்ரல் 17, 18ம் தேதிகளில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, முதலீட்டாளர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, செபியால் அமல்படுத்தப்பட்டதாகும். அதன்படி, பயன்படுத்தப்படாத முதலீட்டாளர் பணம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை (90 நாட்கள்) கட்டாயமாக அவர்களின் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
![]() |
விருப்பமுள்ளவர்கள் மாதந்தோறும் (30 நாட்கள்) பணத்தை திரும்ப பெறவும் தேர்வு செய்யலாம். இந்த பணம் வரவு தொடர்பாக முதலீட்டாளர்கள் குறுஞ்செய்தி அல்லது இ - மெயில் அறிவிப்புகளை கவனித்து, அவர்களின் வங்கி கணக்கில் பணம் சரியாக வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

