/
செய்திகள்
/
வர்த்தகம்
/
சேமிப்பு திட்டம்
/
சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
/
சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
ADDED : மார் 28, 2024 09:55 PM

புதுடில்லி:அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், மாற்றமின்றி தொடரும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், அடுத்த நிதியாண்டான 2024 - 25ன் முதல் காலாண்டில், மாற்றமின்றி தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான நான்காவது காலாண்டிற்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை, ஒவ்வொரு காலாண்டிலும் அரசு அறிவிக்கிறது.