/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஒரே வாரத்தில் ரூ.11,000 கோடி அன்னிய முதலீடு
/
ஒரே வாரத்தில் ரூ.11,000 கோடி அன்னிய முதலீடு
ADDED : செப் 09, 2024 01:45 AM

புதுடில்லி:இந்திய சந்தையின் பின்னடைவு மற்றும் அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இம்மாதத்தின் முதல் வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்குகளில் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 34,252 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றிருந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து இந்திய பங்குகளை வாங்கி வருகின்றனர்.
இந்தியாவின் நிலையான பெரிய பொருளாதார நிலைப்பாடு, அமெரிக்க வட்டி விகிதம் மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இது மேலும் தொடரும் என கூறப்படுகிறது.
தரவுகளின் அடிப்படையில், அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதம் 6ம் தேதி வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு பங்குகளில் கிட்டத்தட்ட 10,978 கோடி ரூபாய் நிகர முதலீட்டை செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டுக்கான செயல்முறைகளை சீராக்கும் நோக்குடன் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு உயர்வதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
பங்குகளில் மட்டுமின்றி, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில், கடன் சந்தையிலும் 7,600 கோடி ரூபாய்க்கு மேல் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.