/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
50,000 பேருந்துகள் ஐச்சர் தயாரிப்பு
/
50,000 பேருந்துகள் ஐச்சர் தயாரிப்பு
ADDED : ஜூன் 27, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஐச்சர் டிரக்ஸ் மற்றும் பஸ்சஸ்' நிறுவனம், அதன் 50,000வது பேருந்தை தயாரித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 50,000வது பேருந்தாக, 'ஐச்சர் ஸ்கைலைன் ப்ரோ இ' என்ற மின்சார பேருந்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் பாகத் பகுதியில் உள்ள இந்நிறுவன ஆலையில், பேருந்துகள் மட்டுமின்றி, இலகு, நடு மற்றும் கனரக வர்த்தக வாகனங்களும் தயாரிக்கப்படுகின்றன.
இவை, டீசல், சி.என்.ஜி., மற்றும் மின்சார பவர்டிரைனில் தயாரிக்கப்படுகின்றன. மாற்று எரிவாயுக்களான, எல்.என்.ஜி., மற்றும் எச்.சி.என்.ஜி., தொழில்நுட்பங்களின் வாயிலாக வாகனங்களை தயாரிக்கவும், ஐச்சர் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.