/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி
/
நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி
நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி
நீண்ட கால மூலதன ஆதாய வரியால் அரசுக்கு வருவாய் ரூ.98,000 கோடி
ADDED : ஜூலை 31, 2024 01:34 AM

புதுடில்லி: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளிலிருந்து, நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், மத்திய அரசு 98,681 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
பங்கு முதலீடுகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபத்திற்கு வரி விதிக்கும் வகையில், மத்திய அரசு, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நீண்ட கால மூலதன ஆதாய வரியை அறிமுகப்படுத்தியது.
இதன்படி, 12 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் பங்குகளை விற்கும்போது, அதில் கிடைக்கும் லாபத்தில், 10 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. சிறிதளவு மட்டுமே லாபம் ஈட்டுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் லாபத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.50 சதவீதமாகவும்; விலக்கு 1.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.