/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ரூ.20,000க்கு மேல் ரொக்க கடன் கூடாது'
/
'ரூ.20,000க்கு மேல் ரொக்க கடன் கூடாது'
ADDED : மே 09, 2024 02:05 AM

மும்பை: வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்க கடன் வழங்கக் கூடாது என்ற வரம்பை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு, ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
எந்த ஒரு தனிநபரும், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 269 எஸ்.எஸ்.,சின் விதிமுறைகளின் படி, 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை பணமாகப் பெற முடியாது. இவ்விதியின் கீழ், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது. இந்த வரம்பை கண்டிப்பாக அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கடைப்பிடிக்கவேண்டும்.
இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.