தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 3 தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை துவக்கியது 'சிட்கோ'

3 தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை துவக்கியது 'சிட்கோ'

3 தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை துவக்கியது 'சிட்கோ'


ADDED : மே 14, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன் அடைய, செங்கல்பட்டு உட்பட மூன்று மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணியை, 'சிட்கோ' நிறுவனம் துவக்கியுள்ளது.

தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை அமைக்கிறது. அங்குள்ள தொழில்மனைகள், குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிறுவனம், 127 தொழிற்பேட்டைகைளை நிர்வகித்து வருகிறது.

புதிதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி தாலுகா, கொத்தக்கோட்டையில், 55 ஏக்கரிலும்; செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, முள்ளிக்கொளத்துாரில், 28 ஏக்கரிலும்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, முத்துாரிலும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன.

திட்ட செலவு, 55 கோடி ரூபாய். இதற்கான அறிவிப்பை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த 2023ல் சட்டசபையில் அறிவித்தார்.

தற்போது செங்கல்பட்டு, முள்ளிக்கொளத்துாரில் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை சிட்கோ துவக்கியுள்ளது. அங்கு நிலத்தை மேம்படுத்தி, சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் அகற்றும் அமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை புறநகரில் புதிய தொழில் நிறுவனங்கள் அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் உள்ள தொழில்முனைவோர் பயன்பெற, செங்கல்பட்டிலும்; வளர்ந்து வரும் தொழில் பகுதிகளான புதுக்கோட்டை, கொத்தக்கோட்டை; திருநெல்வேலி, முத்துாரிலும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், 5,000 நபர்களுக்கு வேலை கிடைக்கும்.

செங்கல்பட்டில் பணிகள் துவங்கிய நிலையில், கொத்தக்குளம், முத்துாரில் நிலம் தயாராக உள்ளது. அங்கு, அடுத்த மாதம் முதல் தொழிற்பேட்டை அமைக்கும் பணி துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us