/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆத்துார் தலைவாசலில் முட்டை உற்பத்தி சரிவு
/
ஆத்துார் தலைவாசலில் முட்டை உற்பத்தி சரிவு
ADDED : மே 09, 2024 02:18 AM

தலைவாசல்: ஆத்துார், தலைவாசல் சுற்றுப்பகுதிகளில், வெயிலால் கோழிகள் இறந்து, 20 சதவீத முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பகலிலும் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணை சங்க நிர்வாக குழு உறுப்பினர் வசந்தராஜன் கூறியதாவது:
தலைவாசல், ஆத்துார், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தினமும், 23 லட்சம் முட்டைகள் உற்பத்தியான நிலையில், கோடை வெயிலுக்கு பின், 17 முதல், 18 லட்சம் வரை முட்டை உற்பத்தியாகிறது. இதில், 30 முதல், 40 வாரம் கொண்ட முட்டை கோழிகள், 70 சதவீதம் உட்பட, 2 லட்சம் கோழிகள், இரு வாரங்களில் இறந்துள்ளன.
கோழி தினமும் தலா, 110 கிராம் அளவுக்கு தீவனம் எடுத்துக்கொள்ளும் நிலையில், தற்போது, 70 கிராம் அளவில் எடுப்பதால், 20 சதவீத அளவு முட்டை உற்பத்தி குறைந்துவிட்டது. வெயில் தாக்கத்தை குறைக்க, கோழிகள் மீது தண்ணீர் தெளிக்கப்படும். இதற்காக, வழக்கமான நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் மும்முனை மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.