/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வருவாய் சரிவு
/
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வருவாய் சரிவு
ADDED : மே 09, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டீசல், பெட்ரோல் ஏற்றுமதி வருவாய், கடந்த நிதியாண்டில் 20 சதவீதம் குறைந்து, 2.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், பெட்ரோல் மற்றும் டீசலின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி அளவு, ஓர் ஆண்டில் 4.16 கோடி மெட்ரிக் டன்னாக உள்ளது.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாயில், டீசல் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. கடந்த நிதியாண்டில், சுத்திகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த எரிபொருட்களின் ஏற்றுமதி வாயிலாக கிடைத்த வருவாய் 3.98 லட்சம் கோடி ரூபாய். இதில் டீசல் மட்டும் 1.83 லட்சம் கோடி ரூபாயாகும்.