/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'செபி' தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
/
'செபி' தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2024 02:54 AM

மும்பை: பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவர் பதவியில் இருந்து, மாதவி புரி புச் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, செபி ஊழியர்கள், மும்பை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம், சமீபத்தில், மாதவி புரி புச் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தது.
'அதானி' நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு நிறுவனம் துவங்கியதாகவும்; அதில் புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் இருவருக்கும் பங்குகள் இருப்பதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து, புச் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை செபி ஊழியர்களிடையே வலுத்து வருகிறது.
இது குறித்து செபி வெளியிட்ட அறிக்கையில், 'ஊழியர்கள் சிலர், வெளிப்புற சக்திகளின் துாண்டுதலால் தவறாக வழி நடத்தப்படுவதாகவும், செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு தவறானவை' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஊழியர்களுக்கு எதிரான கருத்துகளை திரும்ப பெறவும், தலைவர் பதவியில் இருந்து புச் உடனடியாக ராஜினாமா செய்யவும் வலியுறுத்தி, ஊழியர்களில் ஒரு பகுதியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.