/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'டிட்கோ'வின் அறிவுசார் நகரம் சாத்தியக்கூறு பணிகள் துவக்கம்
/
'டிட்கோ'வின் அறிவுசார் நகரம் சாத்தியக்கூறு பணிகள் துவக்கம்
'டிட்கோ'வின் அறிவுசார் நகரம் சாத்தியக்கூறு பணிகள் துவக்கம்
'டிட்கோ'வின் அறிவுசார் நகரம் சாத்தியக்கூறு பணிகள் துவக்கம்
UPDATED : மார் 21, 2024 11:28 PM
ADDED : மார் 21, 2024 11:23 AM
சென்னை:தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் உலகத்தரத்தில் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய அறிவுசார் நகரம் அமைக்க உள்ளது.
இதற்கான தொழில்நுட்பம், செலவு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
துபாய், பிரிட்டன் போன்ற நாடுகளில் அறிவுசார் நகரங்கள் உள்ளன. அங்கு, உலகத்தரத்தில் பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், டிட்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், 1,703 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க முடிவு செய்துள்ளது.
அங்கு, கல்வியை மையமாகக் கொண்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலை, திறன் மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும்; விண்வெளி தொழில்நுட்பம், செமிகண்டக்டர் போன்றவற்றின் ஆய்வில் ஈடுபடும் நிறுவனங்களும் தொழில் துவங்கலாம்.
அறிவுசார் நகரில், 200 கோடி ரூபாய் செலவில், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த நகரின் வடிவமைப்பு, தொழில்நுட்பம், தனியாக அல்லது கூட்டு நிறுவனத்துடன் சேர்ந்து அமைக்கலாமா, செலவுகள்உள்ளிட்டவை தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து வழங்கும் பணியை, சி.பி.ஆர்.இ., என்ற நிறுவனத்திடம் தற்போது டிட்கோ வழங்கியுள்ளது.
இதற்காக, 1.40 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. ஒப்பந்த நிறுவனம், ஆறு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு பணி துவக்கப்பட உள்ளது.

