/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சந்தைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் உள்நாட்டு முதலீட்டாளர் பங்களிப்பு

ADDED : ஆக 21, 2024 12:42 AM

புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகளில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 25.85 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும்; அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 17.38 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் 'பிரைம் டேட்டாபேஸ்' எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சில்லரை முதலீட்டாளர்கள், அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்கள் என வகைபடுத்தப்படுகின்றனர். கடந்த ஜூன் நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகளில் இவர்களின் ஒட்டுமொத்த பங்கு 25.85 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு கடந்த 12 ஆண்டுகளில், குறைந்தபட்சமாக 17.38 சதவீதமாக சரிந்துள்ளது.
இது நாள் வரை, நிறுவனர்களுக்கு பின் அதிகப்படியான பங்குகளை வைத்திருந்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு சரியத் துவங்கியுள்ளன.
அடுத்த சில காலாண்டுகளில், இந்திய சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்களைக் காட்டிலும் உள்நாட்டு நிறுவன ரீதியான முதலீட்டாளர்களின் பங்கு அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.