/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி
/
ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி
ADDED : மார் 03, 2025 06:57 AM

மும்பை : மென்பொருள் சேவை நிறுவனமான 'எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 700 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக உலகளாவிய நிறுவனங்களுக்கு பல்வேறு கற்றல் மற்றும் மதிப்பீட்டு பிரிவுகளில், தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 210 கோடி ரூபாயும், பங்குதாரர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 490 கோடி ரூபாயும் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது.
இதன் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது-.