/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைவு
/
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைவு
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைவு
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைவு
ADDED : ஜூலை 01, 2024 10:52 AM

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான, 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ1,809.50க்கு விற்பனை ஆகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது.