ADDED : ஜூன் 15, 2024 12:56 AM

புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த மே மாதம் 2.61 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
வெப்ப அலை காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததே, பண வீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்தாண்டு பெரும்பகுதி மைனஸ் நிலையில் இருந்த மொத்த விலை பணவீக்கம், கடந்த மூன்று மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு முன்னதாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 3.85 சதவீதம் என்பதே, அதிகபட்சமாக இருந்தது. 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த மாதம், உணவுப் பிரிவு பணவீக்கம் 9.82 சதவீதத்தை எட்டியது.
உணவுப் பொருட்கள், குறிப்பாக காய்கறிகளின் விலை அதிகரித்ததும்; இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோல் மற்றும் குறிப்பிட்ட சில தயாரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்புகளுமே, மே மாதத்தில் பணவீக்கம் உயர முக்கிய காரணமாகும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
