/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பிரதமரின் காப்பீடு திட்டங்களில் இழப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு? மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

ADDED : செப் 04, 2024 12:37 AM

புதுடில்லி:ஆண்டுக்கு 20 ரூபாய், 436 ரூபாய் பிரீமியத்தில் அளிக்கப்பட்டு வரும் இரண்டு காப்பீடு திட்டங்களில், இழப்பீட்டை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வங்கிக் கணக்கில் இருந்து, ஆண்டுக்கு 20 ரூபாய், 436 ரூபாய் பிரீமியத்தில், 'பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா' ஆகிய காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ், இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாக உள்ளது.
இந்த இரண்டு காப்பீடு திட்டங்களில் பிரீமியத்தை உயர்த்தாமல், இழப்பீட்டுத் தொகையை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க பரிசீலித்து வருவதாக, டில்லியில் மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, காப்பீடு திட்டங்களில் இழப்பீட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் காப்பீடு செய்தவர்கள் சராசரி 6.8%
இந்தியாவில் காப்பீடு செய்தவர்கள் சராசரி 4.0%