/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உள்நாட்டு உற்பத்தி குறைவால் இறக்குமதி சார்பு அதிகரிப்பு
/
உள்நாட்டு உற்பத்தி குறைவால் இறக்குமதி சார்பு அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்தி குறைவால் இறக்குமதி சார்பு அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்தி குறைவால் இறக்குமதி சார்பு அதிகரிப்பு
ADDED : ஏப் 18, 2024 12:23 AM

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 16 சதவீதம் சரிந்துள்ளதாக, அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில்,  கச்சா எண்ணெய் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், இறக்குமதியை சார்ந்திருக்கும் நம் நாட்டின் நிலை, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
இந்தியா, கடந்த நிதியாண்டில், மொத்தம் 23.25 கோடி டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு கிட்டத்தட்ட மொத்தம் 11 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, 13 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்திருந்தது.
கடந்த நிதியாண்டில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் அளவு சரிந்த நிலையில், இதனை ஈடுகட்டும் வகையில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் 87.40 சதவீதமாக இருந்த நாட்டின் இறக்குமதி சார்பு, கடந்த நிதியாண்டு சற்றே அதிகரித்து 87.70 சதவீதமாக இருந்தது.

