/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தொழில் துறை உற்பத்தி மார்ச்சில் சற்றே சரிவு
/
தொழில் துறை உற்பத்தி மார்ச்சில் சற்றே சரிவு
ADDED : மே 11, 2024 12:15 AM

புதுடில்லி,:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் சற்றே சரிந்து, 4.90 சதவீதமாக இருந்தது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான பிப்ரவரியில், வளர்ச்சி 5.60 சதவீதமாக இருந்தது.
சுரங்கத் துறையின் சுமாரான செயல்பாடே, மார்ச்சில் தொழில்துறை உற்பத்தி குறைய முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது. இது, கடந்த பிப்ரவரில் 5.60 சதவீதமாகவும்; கடந்தாண்டு மார்ச்சில் 1.90 சதவீதமாகவும் இருந்தது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 5.80 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 2022 - 23 நிதியாண்டிலிருந்த 5.20 சதவீத வளார்ச்சியை விட அதிகமாகும்.
கடந்தாண்டு மார்ச்சில் 6.80 சதவீதமாக இருந்த சுரங்கத்துறையின் வளர்ச்சி, நடப்பு மார்ச்சில் 1.20 சதவீதமாக சரிந்தது.
தயாரிப்பு துறையின் வளர்ச்சி 1.50 சதவீதத்திலிருந்து, 5.20 சதவீதமாகவும்; மின்துறை வளர்ச்சி 1.60 சதவீதத்திலிருந்து, 8.60 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.