/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'இப்போ பே' நிறுவனத்தில் முதலீடு
/
'இப்போ பே' நிறுவனத்தில் முதலீடு
ADDED : ஆக 08, 2024 11:04 PM

சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'இப்போபே' பணப் பரிவர்த்தனை நிறுவனத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்துள்ளனர்.
சிறு நகரங்களில் உள்ள வணிகர்களுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையை கொண்டு செல்லும் நோக்கில் துவங்கப்பட்ட நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான இப்போபே தற்போது காப்பீடு, வணிகக் கடன் மற்றும் கடன் அட்டை சேவையில் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சம் வணிகர்கள், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 'காரட்லேன்' நிறுவனர் மிதுன் சஞ்செட்டி, 'ஜெய்ப்பூர் ஜெம்ஸ்' தலைமை செயல் அதிகாரி சித்தார்த்தா சஞ்செட்டி ஆகியோர், இப்போபே நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளனர்.
இந்த வகையில் இப்போபே நிறுவனம், 20 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.