தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ முக்கிய துறைகள் 6.10% வளர்ச்சி

முக்கிய துறைகள் 6.10% வளர்ச்சி

முக்கிய துறைகள் 6.10% வளர்ச்சி


ADDED : ஆக 31, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நாட்டின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், 6.10 சதவீதமாக இருந்தது. வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 5.10 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜூலையில் 8.50 சதவீதமாகவும் இருந்தது.

எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர மற்ற அனைத்து துறைகளுமே, கடந்த மாதம் வளர்ச்சி கண்டன.

இதேபோல், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தை பொறுத்தவரை, இத்துறைகளின் வளர்ச்சி, 6.10 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது, 6.60 சதவீதமாக இருந்தது.

நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், இந்த எட்டு துறைகள், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இத்துறைகளின் வளர்ச்சி, 6.50 முதல், 7.00 சதவீதமாக இருக்கும் என, அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us